Monday 5 August 2013

Guides - Camp Fire‏

விக்ரோறியாக் கல்லூரியின் பெண் சாரணியர்களுக்கான பாசறை கடந்த மூன்று தினங்களாக கல்லூரியில் நடைபெற்றது. இருபது பெண் சாரணியர்கள் கலந்து கொண்ட இப் பாசறையினை சாரணியப் பொறுப்பாசிரியைகளான திருமதி.தி.கதிர்காமநாதன், திருமதி.சு.பாலகுமார் ஆகியோர் நெறிப்படுத்தினர். வட மாகாண பெண் சாரணிய ஆணையாளர் திருமதி.கி.சிவராஜா உட்பட மாவட்ட மற்றும் வலய ஆணையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரி அதிபரின் ஆசியுடன் ஆரம்பமான பாசறையின் நிகழ்வுகளின் போது சாரணப் பொறுப்பாசிரியரும் காங்கேசந்துறை சாரண மாவட்ட துணை ஆணையாளரும் உப அதிபருமான திரு.செ.சிவகுமாரன் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். சாரணியர்கள் மிக உற்சாகத்துடன் பாசறையை முன்னெடுத்தனர். நிறைவு நாள் பாசறைத்தீ (Camp Fire) நிகழ்வில் கல்லூரி அதிபர் பிரதம விருந்தனராகவும் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.க.ஆனந்தகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். திரு.ஆனந்தகுமார் அவர்கள் வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்களின் உதவியுடன் கல்லூரியின் சாரணர் அமைப்பின் வளர்ச்சிக்காக உதவுவதாகக் கூறினார். சாரணியர்களுக்கிடையிலான போட்டிகளின் போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மிகச் சிறப்பாக இடம்பெற்ற பாசறை நிகழ்வுகளின் போது பெற்றோர், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

See Photos Set1

See Photos Set2

See Videos